கோட் (GOAT) பட வசூலில் ரிலீஸுக்கு முந்தைய வியாபாரத்தைச் சேர்த்தால் இன்னும் பெரிதாக இருக்கும் என அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.
சென்னை: விரைவில் வெளியாக உள்ள ‘டிராகன்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், கோட் படத்தின் உண்மை வசூல் நிலவரத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி, “ கோட் படம் 450 கோடி ரூபாய் வசூல் என்று போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில், திரையரங்கைத் தாண்டி உள்ள வியாபாரம் எதுவும் சேர்க்கப்படவில்லை. எனவே, அதனையும் சேர்த்தால் வசூல் இன்னும் பெரிதாக இருக்கும்.
நாங்கள் என்ன வசூல் என்று சொன்னோமோ அது திரையரங்கத்தின் மொத்த வசூல் மட்டுமே. அதில் இருந்து வரியை எல்லாம் கழித்துக் கணக்கிட வேண்டும். பெரிய படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே திரையரங்க வசூலைத் தாண்டிய அனைத்து வியாபாரமும் பெரிய உறுதுணையாக இருக்கும்.
அதிலிருந்தே பெருவாரியான பணத்தை எங்களால் எடுத்துவிட முடியும். இதனால் திரையரங்க வசூலில் இருந்து வரும் பெரும்பாலான தொகை லாபமாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியை அடுத்து, விஜய் ரசிகர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பொன் விழா நாயகனுடன் கைகோர்க்கும் கிருத்திகா உதயநிதி.. Comeback கிடைக்குமா?
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் The Greatest of All Time என்ற கோட் (GOAT). விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படம், தமிழகத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள நிலையில், வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.