மாறி மாறி குற்றஞ்சாட்டும் அர்னவ் – திவ்யா விவகாரத்தில் புதிய திருப்பம்… வாக்குவாத வீடியோ வெளியீடு..!

சின்னத்திரை நடிகர்களான அர்ணவ் – திவ்யா தம்பதிக்கு இடையே நிலவி வரும் குடும்பப் பிரச்சினையில், பரஸ்பரம் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாத வீடியோவை அர்னவ் வெளியிட்டுள்ளார்.

‘பல்லக்கி’ எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். இதனையடுத்து, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனிடையே, புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

‘கேளடி கண்மணி’ சீரியலை தொடர்ந்து நடிகை திவ்யா மற்றும் அர்ணவ் பிரபலமானார்கள். பின்னர் இருவரும் இனைந்து நடித்து வந்துள்ளனர். மகராசி, செவ்வந்தி சீரியலிலும் திவ்யா நடித்துள்ளார். அர்ணவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

இருவரும் நட்பாக பழகி வந்தநிலையில் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்த இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இதனிடையே நடிகை திவ்யா கர்ப்பமானார். இதனிடையே, கணவர் அர்ணவ் தன்னை தாக்கியதாக கூறி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மனைவி திவ்யா, அவரது நண்பருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைத்துள்ளதாக நாடகம் நடத்துவதாக கூறியுள்ளார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர், இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் திவ்யாவை தான் தாக்கியதாகக் கூறியிருப்பது முற்றிலும் பொய் என்றும், வீட்டில் தான் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளது எனவும், திவ்யா கருவைக் கலைப்பதற்காக நாடகம் ஆடுகிறார் எனவும், தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் இவ்வாறு செய்து வருவதாக அர்ணவ் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய திவ்யா அர்ணவ் தன்னிடம் பாசமாகவே இல்லை. தான் அர்ணவ் உடன் வாழ ஆசைப்படுவதாகவும், தான் தன்னோட மதத்தை விட்டு விட்டு அவரோட மதத்திற்கு மாறியுள்ளதாகவும், ஆனால் தன்னை பொருட்படுத்துவதே இல்லை. தனக்கு என்ன வேண்டும் என்று கூட கேட்பதில்லை. ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்து வருவதாகவும், அவராகவே ஆர்டர் செய்து சாப்பிடுவார் என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தான் கர்ப்பமான காரணத்தால், எந்த புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிடவில்லை எனவும், படிப்படியாக தன் மீதான பாசம் குறையத் தொடங்கியதாகவும், சீரியலில் நடிக்கும் வேறு பெண்ணுடன் நெருங்கி பழக தொடங்கியதால், தான் திருமணம் நடந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் தான் சீரியல் சூட்டிங் சென்றதாகவும், தன்னை அடித்து தள்ளி விட்டதாகவும், வேறு ஒரு பொண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை அசிங்கப்படுத்துகிறார் என்று கண்ணீர் விட்டு கதறினார் திவ்யா.

மேலும் அவர் தன்னை சோசியல் மீடியாவில் இருந்து பிளாக் செய்து விட்டதாகவும், கணவருடன் தொடர்பில் இருக்கும் அந்த பெண் தனது முன்னிலையிலே தன் கணவருக்கு முத்தம் தருவதாகவும், ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதாகவும், தான் சோசியல் மீடியாவில் போட்டோக்களை போட்டதில் இருந்தே தனக்கு இந்த மாதிரியான கொடுமைகள் ஆரம்பமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே திவ்யா அளித்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நடிகர் அர்ணவிடம் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தனது மனைவிக்கு மன ரீதியான பாதிப்பு இருந்ததாக கூறி, அர்ணவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அர்னவை துரோகக்காரா, நீ எனக்கு துரோகம் செய்து விட்டாய், நீ ஆம்பளையா என திவ்யா கேட்கிறார்.

அதற்கு அர்ணாவ் நீ தான் எனக்கு துரோகம் செய்து இருக்க புருஷன் குழந்தைகளை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து இருக்க என்று பேசுகிறார். ஆனால் அப்போதும் அர்ணாவ் முகம் அதில் தெரியவில்லை. இதனிடையே, ஈஸ்வர் என்பவருடனும் போனில் குடும்பத் தகராறை கூறி வருகிறார் திவ்யா. அர்னவ் ஷேர் செய்த இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

12 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

13 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

13 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

14 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

14 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

15 hours ago

This website uses cookies.