ஏற்கனவே விவாகரத்து ஆனவரா ரம்யா கிருஷ்ணன்… அதுவும் இந்த பிரபல நடிகரா?

Author: Shree
9 June 2023, 4:33 pm
Ramya Krishnan
Quick Share

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80ஸ் , 90ஸ் களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்த Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. தொடர்ந்து தெலுங்கு , தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். தற்போது 52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் அதே இளமையோடு அழகாக இருக்கிறார். இவர் 2003ம் ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் கிரிஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்வதற்கு முன்னரே பிரபல நடிகரான யூகி சேதுவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாராம். இதனிடையே அவர்களுள் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவரை விவாகரத்து செய்த கையேடு தெலுங்கு படங்களில் நடிக்க போறேன் என போனவர் அங்கே வம்சியை கரம்பிடித்துவந்துவிட்டார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுவரை யாருக்கும் தெரிந்திராத இந்த தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 112

0

1