தமிழ் சினிமாவில் இன்று நடிப்பின் நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் சூர்யா. அவர் இந்த அளவுக்கு தலைசிறந்த நடிகராக உருவெடுக்க முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் என்றால் அது பாலா தான்.
இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரு படங்கள் தான் சூர்யாவை ஒரு தரமான நடிகராக்கியது. சூர்யாவின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியதும் இந்த இரண்டு படங்கள் தான்.
இதனால் சூர்யா – பாலா இடையே நெருங்கிய நட்பும் உருவானது. இதன் காரணமாக தான் பாலா இயக்கத்தில் ஆர்யா – விஷால் நடித்த அவன் இவன் படத்தில் கூட நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.
நந்தா, பிதாமகன் படத்துக்கு பின்னர் சூர்யாவும், பாலாவும் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
அவர்கள் இருவரும் வணங்கான் என்கிற படத்தின் மூலம் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
கன்னியாகுமரியில் வணங்கான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஒருமாதம் நடத்தினர். அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அதன்பின் நடக்கவே இல்லை. படத்தின் கதையில் சில மாற்றங்களை பாலா செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.
ஆனால் அந்த மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாது என்பதால் அவரை இப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், அதனால் சூர்யா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாலா. இருப்பினும் வணங்கான் படத்தின் பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் நடிக்க நடிகர் அருண் விஜய்யை நடிக்க வைக்க இயக்குனர் பாலா முடிவு செய்தார்.
இந்நிலையில், பல வித்தியாசமான ஆக்ஷன், திரில்லர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் நடிப்பில், சமீபத்தில் சினம் திரைப்படம் வெளியானது.
தற்போது ஏ.ல் விஜய் இயக்கும் “அச்சம் என்பது இல்லையே” என்ற படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை எமி ஜாக்சன் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய் டூப் எதுவும் போடாமல் அவரே அனைத்து சண்டை காட்சிகளிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் சண்டை காட்சியின் போது அருண் விஜய்க்கு முழங்காலில் அடிபட்டு விட்டதாம், அப்போது காயத்துக்கு சிகிச்சை அளித்தும் குணமாகாததால், தற்போது அருண் விஜய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
This website uses cookies.