தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் நடிக்க ஆரம்பித்து தனது கெரியரை துவங்கினார். அவர் தொடர்ந்து காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி போன்று சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவர் முன்னணி நடிகராக வரமுடியவில்லை.
தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்ததால் அவர் மார்க்கெட் இழந்து ராசியில்லாத நடிகராக சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். வாரிசு குடும்பத்தில் பிறந்தும், நல்ல நடிப்பு திறமை இருந்தும் கதை தேர்வு சரியாக செய்ததால் அருண் விஜய் கெரியரையே இழந்துவிட்டார்.
அதன் பின்னர் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து மிரட்டினார். இப்படத்தில் அஜித்தை காட்டிலும் அருண் விஜய் கேரக்டர் தான் பெரிதாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தது. அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் வாய்ப்புகள் மளமளவென குவிந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளார்.
அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அருண் விஜய் அஞ்சலி செலுத்தியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் வயிறார சாப்பாடு போட்டது விஜயகாந்த் தான். அதோடு, மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் ஒரே சாப்பாடு தான் விஜயகாந்த் போடுவார்.
மேலும், விஜயகாந்த் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த நிலையில், அதில் ஒன்றாவது நாம் பின்பற்ற வேண்டும் என்று அருண் விஜய் கூறியிருந்தார். அதன்படி இனி வரும் காலங்களில் என்னுடைய படப்பிடிப்பு தளத்திலும் எல்லோருக்கும் ஒரே சாப்பாடு தான் என்று அருண் விஜய் மைக் கிடைத்தது என்று இந்த விஷயத்தை கூறிவிட்டார்.
ஆனால், இப்போது உள்ள காலகட்டத்தில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான் அதுவும் படபிடிப்பில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு அருண் விஜய் போடுவது கிடையாது. அதை எல்லாம் தயாரிப்பாளர் உடைய செலவு தான். அதோடு மட்டுமல்லாமல் விஜயகாந்த் இருந்தவரை தன்னுடைய படங்களில் நடிப்பவர்களுக்கு அவருடைய சொந்த செலவில் தான் அவரது வீட்டில் இருந்து சாப்பாட்டை வர வைப்பார். இப்போது, உள்ள காலகட்டத்தில் அருண் விஜய் இவ்வாறு வாய்ப்பேச்சுக்காக சொல்வதெல்லாம் நடக்காத காரியம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலரோ அருண் விஜய் நிச்சயமாக அவருடைய சொந்த செலவில் அனைவருக்கும் விஜயகாந்த் போலவே உணவளிப்பார் என்று ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.