கொரோனா தொற்றால் அருண்ராஜா காமராஜாவின் மனைவி காலமானார் – திரை பிரபலங்கள் இரங்கல் !

17 May 2021, 8:41 am
Quick Share

“நீ யாரா வேணா இரு, ஆனா இந்த கொரோனா கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு…” என்று கொரோனா நம்மளை தினமும் எச்சரித்து வருகிறது. ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி என அனைவருமே இந்த வைரஸ் தொற்று பரவுகிறது.

கோலிவுட்டில் விஷால், தமன்னா, நிக்கி கல்ராணி,SPB, விஜயகாந்த், சுந்தர் C, பாண்டு, கே. வி. ஆனந்த், மாறன் மற்றும் பாலிவுட்டில் அமிதாப், அபிஷேக், ஐஷ்வர்யா ராய், அமிர்கான், தெலுகு திரைப்பட உலகில், ராஜமௌலி, சிரஞ்சீவி போன்ற பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து தெலுகு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ஜுனியர் NTR என இன்று முக்கால்வாசி நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு பிரிய, உலகமே அச்சத்தில் உள்ளது.

அதுவும் இந்த இரண்டாவது அலையில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் ஒரு சிலர் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனாவால் கனா பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 214

0

0