தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அரவிந்த்சாமி. பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் பலரின் பேவரைட் ஹீரோ தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 57 வயதாகியும் கூட தற்போது வரை ஹேண்ட்ஸம் ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நடிகர் அரவிந்த்சாமி குறித்து மிகவும் மோசமான கருத்தை பதிவு செய்திருக்கிறார் . அந்த பேட்டில் அவர் கூறியிருப்பதாவது மனோபாலா சார் அரவிந்த்சாமி வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை தயாரித்திருந்தார் .
அந்த படத்தை வெளியில் கொண்டுவர நிறைய முயற்சிகள் செய்தார்கள். கடைசியில் அந்த படம் வெளிவராமல் அவர் இறந்தும் போய்விட்டார். அதில் ஹீரோவாக நடித்த அரவிந்த்சாமிக்கு கொஞ்சம் சம்பளம் பாக்கி இருக்கு. அந்த சம்பள பாக்கியை கொடுத்தால் தான் டப்பிங் வருவேன் என கரராக சொல்லிவிட்டார் .
கொஞ்சமாவது நடிகர்கள் இறங்கி வரணும். மனிதாபிமானம் என்பது அரவிந்த்சாமிக்கு சுத்தமாகவே இல்லை. அவருக்கு மட்டும் இல்லை பல நடிகர்களுக்கு மனசாட்சியே இல்லை. அப்படிப்பட்ட நடிகர்களை தளபதி, உலகநாயகன், சின்ன தளபதி, புரட்சி தளபதி, திடீர் தளபதி, அடுத்த நாளைக்கு வரும் கவின் என்று புதுசு புதுசாக கிளம்பி வருகிறார்கள் .
எல்லாம் இப்படி வந்து கேவலப்படுத்துறாங்க . ஆனால் கொஞ்சம் கூட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் நிலை அவர்கள் நினைத்து பார்ப்பதே கிடையாது என பாலாஜி பிரபு அந்த பேட்டியில் காட்டமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் அரவிந்த்சாமி சம்பள பாக்கி கொடுக்க வேண்டும் என கரராக கூறியதால் தான் சதுரங்க வேட்டை படம் பாதியிலே நிறுத்தப்பட்டதா? என்ற ஒரு கேள்வி தற்போது அனைவரும் மனதிலும் எழுந்து இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.