தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் ஆர்யா கடந்த 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த “அறிந்தும் அறியாமலும்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தில் எதிர் நாயகனாக அறிமுகமான அவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆர்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சட்டை போட்டு போட்ட திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை .
இந்த திரைப்படத்தில் ஆர்யா மிகச் சிறப்பாக நடித்ததற்காக பல விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்டார். ஆர்யாகஜினிகாந்த் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த சயீஷாவை காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்யா – சயீஷா திருமணம் குறித்து பேசி இருக்கிறார் சயீஷாவின் அம்மா.
அவர் கூறியதாவது, கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்னர் கஜினிகாந்த் திரைப்படத்தில் ஆர்யா – சயீஷா இருவரும் ஒன்றாக நடித்திருந்தார்கள். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சொல்ல போனால் அது காதல் திருமணமே கிடையாது .
கஜினிகாந்த் படத்தின் சூட்டிங் முடிந்த உடனே ஆர்யா சயீஷாவிடம் கூட தன்னுடைய காதலை கூறாமல் நேராக என்னிடம் வந்து முறையாக பெண் கேட்டார். அதற்கு பிறகு தான் அவர்கள் காதலிக்கவே ஆரம்பித்தார்கள். அப்போது அவருக்கு Yes சொன்னதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம் என்று ஆர்யாவின் மாமியார் ஷாஹீன் இந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு ரசிகர்கள் பலரும் “மாமியாருக்கும் வலை வீசியா ஆர்யா… நேரா வீட்டுக்கு சென்று பெண் கேட்டு இருக்காரே என அவரின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
This website uses cookies.