2021ல் 100 கிமீ தூரம் சைக்கிள் ரைடு சென்ற ஆர்யா!

18 January 2021, 6:00 pm
Quick Share


2021 ஆம் ஆண்டில் முதல் 100 கிமீ தூர சைக்கிள் பயணத்தை நடிகர் ஆர்யா வெற்றிகரமாக முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, பட்டியல், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், மகாமுனி, காப்பான் என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில், டெடி, புஷ்பா, சார்பட்டா பரம்பறை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


ஆர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருக்கிறார். இது ஒரு புறம் இருந்தாலும், அனைவருக்கும் தீவிர உடற்பயிற்சி வலிமையை அளித்து வரும் ஆர்யா சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஆண்டின் முதல் 100.10 கிமீ தூர சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். அதுவும், 3 மணிநேரம், 24 நிமிடம் மற்றும் 22 வினாடிகளில் முடித்துள்ளார்.
இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அழகான ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவுக்கு 100 கிமீ தூரம் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு 100.32 கிமீ தூரத்தை வெறும் 3 மணிநேரம் 27 நிமிடம் மற்றும் 55 வினாடிகளில் முடித்துள்ளார். இது அவரது சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருடன் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமாரும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்யா தீவிரமாக சைக்கிள் ஓட்டுவதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பல சர்வதேச சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்று பல பதக்கங்களையும் கைப்பற்றியிருக்கிறார். அவர் சைக்கிள் ஓட்டுவதும் மற்றும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் வலியுறுத்தவில்லை. அவருடன் சைக்கிள் ரைடு செய்ய பலரையும் அழைத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0