காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அசோக் செல்வன் – ‘K’ எழுத்தில் பெண்ணின் பெயர் துவங்குமாம்..!

Author: Vignesh
20 March 2023, 2:15 pm
ashok selvan -updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் அசோக் செல்வன் அண்மையில் நடித்திருந்த நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

ashok selvan -updatenews360

இதனை தொடர்ந்து “நெஞ்சமெல்லாம் காதல்” எனும் திரைப்படத்தில் தற்போது நடிகர் அசோக் செல்வன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

ashok selvan -updatenews360

இதனிடையே, இருவக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அசோக் செல்வனுக்கு 33-வயதான நிலையில் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் அசோக் செல்வன் நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரின் மகளை காதலித்து, இரு வீட்டாரூம் கலந்து பேசி திருமணத்திற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ashok selvan -updatenews360

இதையடுத்து விரைவில் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த நடிகையின் பெயர் ‘K’ எழுத்தில் துவங்கும் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 163

0

0