தனித்தீவில் பிரபல நடிகையுடன் அசோக் செல்வன்…. அப்போ அது உண்மை தானா?

Author: Shree
5 June 2023, 7:04 pm
ASHOK SELVAN
Quick Share

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.

அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது. இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், அசோக் செல்வன் ஒரு பிளே பாய் என்று எங்களுக்கு தெரியும். இப்போ மாறிட்டாரா? என்ற கேள்விக்கு ஆமாம் என கூறினார். அதன் பின்னர், ஒரு தனித்தீவில் உங்களை விட்டுவிட்டு 3 பேர் உதவிக்காக அனுப்பினால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள். 1) ஜனனி ஐயர் 2) ரித்திகா சிங் 3) சம்யுக்தா என கேட்டதற்கு ரித்திகா சிங் என பதில் அளித்ததோடு எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும் என கூறினார். இவர் இப்படி கூறியதால், ஒருவேளை இவர்களை குறித்து வெளியான காதல் வதந்திகள் அனைத்தும் உண்மைதான் போல என ரசிகர்கள் கூறியுள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்:

Views: - 716

18

10