கேரளத்து பைங்கிளியான நடிகை அசின் நல்ல உயரம், அழகான தோற்றம் , ஸ்லிம் பிட் லுக் என அறிமுகம் ஆனதில் இருந்தே இருந்தே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் அழகால் வசீயம் செய்தவர். ஆரம்பத்தில் பரதநாட்டியக் கலைஞராக இருந்த அசின் 2001 ஆம் ஆண்டில் வெளியான ” நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.
அறிமுகமான முதல் படமே மாபெரும் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்ததால் அசின் புகழ் பாராட்டப்பட்டு தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வந்தார். பின்னர் தெலுங்கில் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ” அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி” என்று படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அசின் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார்.
அது தான் தமிழில் வெளிவந்த எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படம். தமிழிலும் சூப்பர் ஹிட் அடிக்க கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர் பாலிவுட்டிற்கு சென்று இந்த பக்கமே திரும்பி பார்க்கவி ல்லை. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.
அழகான குடும்பம் ஒரு மகள் என நிம்மதியாக வாழ்ந்து வரும் அசின் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தும் அவரது மார்க்கெட் சரிந்ததன் காரணம் இந்தி சினிமா தான் என கூறப்படுகிறது. ஆம், பாலிவுட்டிற்கு சென்று ஹவுஸ்புல், ரெடி, போல் பச்சான், கில்லாடி 786, ஆல் இஸ் வெல் என அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து மார்க்கெட்டையே காலி செய்துக்கொண்டார். தற்போது நயன்தாராவும் அதே லிஸ்டில் தான் இருக்கிறார். ஆம், அவர் நடித்த ஜவான் திரைப்படத்தில் நயன்தாராவை விட தீபிகா படுகோன் ரோலுக்கு தான் ஸ்கோப் இருந்தது. அதனால் நயன்தாரா அப்படத்தில் டம்மியாகிவிட்டார். எனவே இனிமேல் இந்தி படங்களில் தலைகாட்டாமல் இருந்தாலே தலைவி மார்க்கெட்டை தக்கவைப்பார் என கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.