நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் சிலரோ அவர் கட்சி எல்லாம் தொடங்கி தேர்தலை சந்திக்க மாட்டார், ரஜினி போல
சும்மா பேசி விட்டு கடைசி நேரத்தில் ஒதுங்கி விடுவார் என்று கிண்டலாகவும் விமர்சித்தனர்.
இந்த வாதம் முற்றிலும் தவறானது, என்பதை உணர்த்தும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியிட்டு இருக்கிறார்.
அவருடைய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் பிரதான இலக்காக இருக்கும் என்பதை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் வெளிப்படையாக
குறிப்பிட்டு இருக்கிறார்.
1984ல் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய் சுமார் 30 ஆண்டுகளுக்கு கழித்து ஏறக்குறைய அதே பெயர் வரும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது கட்சிக்கு சூட்டியிருப்பதுதான்
இதில் ஆச்சரியமான விஷயம்.
மேலும், இதுவரை கமிட் செய்துள்ள படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் விஜய் ஈடுபடுவார் என கூறப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் வருகையின் காரணமாக சினிமாவில் அவருடைய இடத்தை வேறு யார் பிடிக்கப் போகிறார் என்ற பேச்சும் தற்போது எழுந்துள்ளது. வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது, அரசியலில் களமிறங்குவதன் காரணமாக இனி தமிழ் சினிமாவில் விஜயின் இடத்தில் யார் இருக்கப் போகிறார்.
அடுத்த தளபதி யார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், முன்னதாக தனக்கு என்று பெரும் அளவிலான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் விஜய். குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் கதாநாயகனால் மட்டுமே விஜய் இடத்தை பிடிக்க முடியும் என்பதை பலருடைய கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பலரும் சிவகார்த்திகேயன் பெயரை டிக் அடித்துள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில், விஜய்க்கு அடுத்தபடியாக அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். முன்னதாக, விஜய் இடத்தை பிடிக்க பலருக்குக்கும் ஆசை இருக்கும், போட்டி போடும் எண்ணமும் இருக்கும். அதனால், வெற்றி பெறப் போகிற வரை காலம் தான் முடிவு செய்யும் நாம் முன்பே கூறி இருந்தோம்.
இந்நிலையில், பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தளபதி என்ற டைட்டில் யாருக்கு சேரும் என்பதை பகிர்ந்து உள்ளார். நடிகர் விஜய்யின் அரசியலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள். பாமர மக்கள், படித்த மாணவர்கள், மாற்றத்தை வேண்டும் என்பவர்கள் தான் ஆதரவு அளிப்பார்கள் என்றும், விஜய் இருக்கும் போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறுவதை போன்று அவருக்கு அடுத்து யார் பெயர் என்ற கேள்விக்கு, சிவகார்த்திகேயன், தனுஷ் இருப்பார் எனவும், அந்த வாய்ப்பை சிம்பு கைவிட்டுவிட்டார் என தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.