சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து மக்கள் சேவையில் இறங்கினர். அதே போல் அண்மையில் விஜய் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடத்தி அரசியல் என்ட்ரி குறித்து பேசி தமிழகம் முழுக்க கவனத்தை ஈர்த்தார்.
இப்படி தொடர்ந்து முழு வீச்சில் அரசியலில் இறங்கவுள்ள விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்தோடு தனது நடிப்பு தொழிலை நிறுத்திக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.
பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவார் அரசியல் திட்ட வேலைகளை செய்வார் என்றும், ஆனால் சினிமாவை விட்டு வெளியில் வரமாட்டார். விஜயகாந்த்துக்கு விருச்சிக லக்னம் இருப்பதால் சந்திர மங்கள் யோகம் இல்லை. விஜயகாந்துக்கு சந்திரன் செவ்வாய் தோஷம் இருக்கிறது. ஆனால் விஜய் அவரே கட்சி ஆரம்பித்து நின்று ஜெயிக்க முடியாது என்றும், அப்படி என்றால் வேறு யாராவது அவருக்கு எதிராக என்று அவரை தோற்கடிப்பார்கள் என்றும், விஜய் விஜயகாந்த் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.