“புதுப்பேட்டை, அசுரன்” பட நடிகர் நிதிஷ் கொரோனாவால் மரணம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

17 May 2021, 10:00 am
Quick Share

“உன் பையன பத்தி உனக்கு சரியா தெரியாது நாளைக்கு சரியா புதைச்சு இருக்காங்களான்னு குழிய தோண்டி பார்ப்பான்” என்று புதுபேட்டையில் மணி என்கிற கதாபாத்திரம் பேசிய இந்த வசனம் மிக பிரபலம். புதுப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பிறகு வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் நிதிஷ். வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பின் காலா, அசுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் அசுரன் படத்தின் தெலுங்கு ரிமேக்கிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்ற வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 48 ஆகும்.

இன்று அதிகாலையில் தான் இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா இன்று கொரோனாவால் பலியானது கூடுதல் தகவல்.

இன்னும் இந்த கொரோனா எத்தனை பேரை காவு வாங்கப் போகிறதோ என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள் மக்கள்.

Views: - 148

0

0