நடிகர் விஜய்யின் மாமா சேவியர் ப்ரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷுக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.சினேகா “சட்டம் ஒரு இருட்டறை 2” படத்தை இயக்கியவர்.
சிங்கப்பூரில் படித்தபோது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாற அதை வீட்டில் தெரிவித்து திருமணம் செய்து கொண்டார்கள். வெவ்வேறு மதம் என்பதால் முதலில் இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.
இந்நிலையில் தனது மருமகன் ஆகாஷ் முரளியை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. நேசிப்பாயா’ என பெயரிடப்பட்ட அந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் டாக்டர் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.’விருமன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் இணைந்து நடித்தார். “விருமன்’படத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக நடித்திருக்கும் அதிதி அடுத்து அவருடைய அண்ணன் சூர்யா ஜோடியாக நடிக்க இருக்கிறார்,
தற்போது ஆகாஷ் முரளியின் அண்ணன் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிவா மனசுல சக்தி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்குகிறார். ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.