“பாணா காத்தாடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்த அதர்வா, அதனை தொடர்ந்து “முப்பொழுதும் உன் கற்பனைகள்”, “பரதேசி”, “சண்டிவீரன்” போன்ற வித்தியாசமான கதையம்சத்தில் நடித்தார். ஆனால் அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அவரது கெரியருக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இதனால் அவரது மார்க்கெட் சரிவை கண்டது.
இந்த நிலையில் தற்போது “DNA” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அதர்வா. இத்திரைப்படத்தை “ஒரு நாள் கூத்து”, “மான்ஸ்டர்”, “ஃபர்ஹானா” போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் வெளிவந்துள்ளது.
“DNA” திரைப்படம் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளதாக இத்திரைப்படத்தின் டிரெயிலரின் மூலம் தெரிய வருகிறது. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். நிமிஷாவுக்கும் அதர்வாவுக்கும் இடையே திருமணம் நடக்கும் நிலையில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு ஏதோ அசம்பாவிதம் ஏற்பட அதனை சுற்றி என்ன நடக்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைக்கருவாக இருக்கும் என யூகிக்கமுடிகிறது.
மேலும் இதில் நிமிஷா சஜயனின் கதாபாத்திரம் மனநிலை பிரச்சனையுடைய கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதில் அதர்வா, நிமிஷா சஜயன் ஆகியோருடன் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் நிச்சயம் அதர்வாவுக்கு கம்பேக் ஆக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.