தனது காதல் மனைவியுடன் கமல்ஹாசனை சந்தித்த அட்லி ! காரணம்…

28 November 2020, 12:30 pm
Quick Share

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் அட்லி. அப்டின்னு அட்லி சொன்னாதான் நமக்கு தெரியும். அதற்கான சாயலை அட்லி படத்தில் கொஞ்சம் கூட தெரியாது, ஏன் என்றால், அவர் மணிரத்தினத்தின் சிஷ்யன் போல் காட்சிக்கு காட்சி அவர் படத்திலிருந்து தான் சுடுகிறார்.

ராஜா ராணி – மௌனராகம் விமர்சனங்களை அட்லி மழுப்பி என்னன்னவோ பதில் கூறி சமாளித்தார். பிறகு சத்ரியனை பட்டி Tinkering செய்து தெறி எடுத்தார். சத்ரியன் படம் மணிரத்னத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுப்பான அட்லி ஒரே படத்தை தழுவினால் தானே கண்டுபிடிக்கிறார்கள் என்று அதன் பிறகு இரண்டு படங்களை கலந்தார். அபூர்வ சகோதரர்கள், மூன்றுமுகம் கலந்து மெர்சலைத் தந்தார். Total தேனாண்டாள் பிலிம்ஸ் Close !

இது குறித்து அவரிடம் கேட்டால், ச.ரி.க.ம.ப.த.நி என்ற ஏழு ஸ்வரங்கள் என்று ஆரம்பித்து அவருக்கே புரியாத பதிலை தருகிறார்.

இந்த நிலையில் அட்லி மற்றும் அந்தகாரம் பட தயாரிப்பாளர் பிரியா அட்லி, அர்ஜுன் தாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் நேற்று உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றனர். அவரை சந்திக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது செம்ம வைரல்.

Views: - 20

0

0

1 thought on “தனது காதல் மனைவியுடன் கமல்ஹாசனை சந்தித்த அட்லி ! காரணம்…

Comments are closed.