கல்யாணத்துக்கு இப்படியா போறது… அட்லீயை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி இருந்தார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இந்நிலையில், அட்லீயின் இப்படத்தையும் நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே ட்ரோல் செய்து வந்தனர். அதன்படி, ஜவான் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு படங்களில் இடப்பெற்ற காட்சிகளை பிட்டு பிட்டாக சுட்டு தான் படம் எடுத்து வைத்து இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸின் படத்தில் இருந்தே நிறைய காட்சிகள் சுடப்பட்டிருப்பதாக நெட்டிசன்ஸ் கண்டுபிடித்து கலாய்த்து இருந்தனர்.

இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், அட்லீ இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆகிவிட்டார் என்பது உண்மை. அதாவது, அட்லீ இயக்கிய ஜவான் படம் உலகம் முழுவதும் ரூபாய் 1100 கோடிகள் வசூல் செய்து, அட்லீயை பிரம்மாண்ட உயரத்தில் அமர வைத்துள்ளது.

மேலும் படிக்க: தடபுடலாக நடந்த ரோபோ ஷங்கர் மகளின் திருமணம்.. கொடுக்கப்பட்ட வரதட்சணை எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கம் உள்ளதாகவும், இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், அட்லீ தற்போதுயெல்லாம் தமிழ்நாடு பக்கம் வருவதே இல்லையாம். மும்பையிலேயே ஒரு பிரம்மாண்ட ஆபீஸ் போட்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அட்லீ என்னதான் பெரிய பெரிய ஹிட் கொடுத்தாலும், அவருடைய படங்களின் காட்சிகள் பல படங்களில் இருந்து சுடப்பட்டவை என்பதை தவிர்க்க முடியாது.

அதிலும், ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி இவர் அடித்த காப்பியெல்லாம் ரசிகர்களே மறந்து விட்டனர். அந்த அளவுக்கு இருந்தது, இது ஒரு புறம் இருக்க இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக அட்லீ வளர்ந்து விட்டார். அதாவது, சுமார் 30 கோடிகள் வரை அவரது சம்பளம் உயர்ந்து உள்ளது. இவரின் சொத்து மதிப்பு 60 கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு மேல் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தற்போது, அட்லீ தன்னுடைய அடுத்த பட கதை தயார் செய்துவிட்டு படத்தை இயக்க தயாராக உள்ளார். அட்லீ தன்னுடைய அடுத்த படத்தை புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து இயக்க உள்ளாராம். விரைவில், இந்த படத்தை தயாரிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவுவதாகவும், அட்லீ இந்த திரையுலகில் இதுவரை யாரும் பெறாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை தயாரித்து வரும் நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வருகிற ஜூலை 12ம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது, திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியில், அட்லீ மற்றும் பிரியா அட்லீ வித்தியாசமான கலர் உடையில் வந்துள்ளார். திருமண நிகழ்ச்சிக்கு இப்படியா டிரஸ் போடுவது? என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

6 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

7 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

8 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.