பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.
அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்நிலையில், அட்லீ இயக்கிய அத்தனை படமும் வேறு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்களால் அப்பட்டமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதே போல் தற்போது இந்திக்கு சென்றும் காப்பியடிச்சான் வேலை பார்த்துள்ளார் அட்லீ. ஆம், ஜவான் படத்தின் சண்டை காட்சி ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் இருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாலிவுட் கிங் ஷாருக்கானை இயக்குவதால் அட்லீயின் மார்க்கெட் டாப் இடத்திற்கு உயர்ந்துவிட்டது. எனவே ஜவான் படத்தை அடுத்து அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி ரூ.10 கோடி வரை அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருக்கிறதாம். ஜவான் படத்திற்காக அட்லீ ரூ30 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது கிட்டத்தட்ட டபுளாக உயர்த்தியுள்ளதை பார்த்து கோலிவுட்டே அதிர்ந்துவிட்டது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் ” ஜவான் படத்தால் சூடான இட்லி…. ஆவி பறக்கும் அட்லீ” என அவரது மார்க்கெட் ரேஞ்சை வைத்து மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.
இந்நிலையில், ஒரு பக்கம் தளபதி 69 படத்தை அட்லி தான் இயக்கப் போகிறார் எனக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது நடக்க வாய்ப்பே இல்லை என்று மற்றொரு புறமும் பேசி வருகிறது.
ஏனென்றால், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஏற்கனவே அட்லீ கமிட் ஆகியுள்ளதாகவும், அந்த படத்திற்கான வேலைகளில் தான் தற்போது பிஸியாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால், தான் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லீ கேட்டுள்ள சம்பளம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதாவது, இப்படத்தை இயக்குவதற்கு ரூபாய் 60 கோடி சம்பளம் கேட்டுள்ளாரம் அட்லீ இதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் அட்லீக்கு 60 கோடி சம்பளம் என்றால் கோலிவுட் திரையுலுகில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிடுவார். அட்லீயின் குருவான ஷங்கர் இந்தியன் 2 படத்திற்கு 50 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.