நடிகர் தினேஷ் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.இப்படத்தில் இவருடைய நடிப்பு அசத்தலாக இருந்தது மட்டுமில்லாமல்,படமும் வெற்றி பெற்றது.இதனால் ரசிகர்கள் அனைவரும் அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
இதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த அவர் குக்கூ திரைப்படத்தில் பார்வையற்ற நபராக நடித்து இருப்பார் என்று சொல்லுவதை விட வாழ்ந்திருப்பார்,அந்த அளவிற்கு மிக தத்ரூபமாக ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருப்பார்.இப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பல வருடமாக இவருக்கு கண்ணில் பிரச்சனை இருந்தது,அதற்காக சிகிச்சையெல்லாம் மேற்கொண்டார்,அந்த அளவிற்கு சினிமாவை நேசித்த அவருக்கு கடந்த வருடம் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இதையும் படியுங்க: தடபுடலாக தொடங்கிய “விடாமுயற்சி” டிக்கெட் முன்பதிவு…முண்டியடிக்கும் ரசிகர்கள்..!
இதில் கெத்து கேரக்டரில் சும்மா கெத்தாக நடித்திருப்பார்,இந்த படத்தின் வெற்றி மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.இதற்கு முன்பு வரை 1 கோடி மட்டுமே சம்பளமாக பெற்று வந்த இவர்,தற்போது தன்னுடைய சம்பளத்தை 8 கோடியாக உயர்த்தியுள்ளார்.
சினிமாவில் திறமையில்லாத பல நடிகர் நடிகைகள் அதிக தொகையை சம்பளமாக வாங்கும் பட்சத்தில்,திறமையுள்ள கெத்து தினேஷ் சம்பளத்தை உயர்த்திருப்பது தவறில்லை என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.