“உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா, சீக்கிரம் என் வீட்டுக்கு வா!” CORONA-வால் பாதிக்கபட்ட ரசிகருக்கு ரஜினி அனுப்பிய ஆடியோ !

17 September 2020, 5:24 pm
Quick Share

All India சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் உலக மக்களுக்கு கூட தெரியும். அவர் நடை, பேச்சு, ஸ்டைல் எல்லாமே சின்ன 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை கவர்ந்து இழுக்கக் கூடியது.

அதும்மாட்டுமின்றி பணம் பேரு புகழ் வந்த அப்பறம் நல்லவனா வாழுறது கஷ்டம். ஆனா எல்லாமே தேவைக்கு அதிகமாக கிடைச்ச அப்பறமும் ஒரு மனுஷன் நல்லவரா எளிமையானவரா அன்பனவரா இருக்காருனா அது superstar ரஜினி மட்டுமே.

தற்போது இவர் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். குருநாதா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது கூடிய விரைவில் இந்தப் பிரச்சினை ஓய்ந்த பிறகு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என ரஜினி வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள் இந்த நிலையில் இவரது ரசிகர் முரளி என்பவர், CORONA + காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த செய்தி தெரிந்த ரஜினி உடனடியாக தனது பிஆர்ஓ மூலம் ஒரு ஆடியோ செய்தியை அந்த ரசிகருக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன், உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா, சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு வா கண்ணா… ஆண்டவன் இருக்கான்” என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ தான் தற்போதைய ஹாட் டாக்.