இன்னும் சின்ன பொண்ணு மாதிரி சிக்குன்னு இருக்கும் ஆட்டோகிராப் கோபிகா ! வைரலாகும் Photos !
22 January 2021, 6:50 pmமனசுக்குள்ளே காதல் வந்துச்சா ? வந்தல்லோ ! வந்தலோ ! அந்த கோபிக்காவா யாரும் மறக்க முடியாது. மேலும், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்துள்ளார். ஏறத்தாழ 30 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார் கோபிகா.
சேரன் இயக்கத்தில், நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்டம் ஆட்டோகிராப். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக, மலையாள பெண்ணாக நடித்தவர் நடிகை கோபிகா. ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பின்னி பெடல் எடுத்தார் கோபிகா.
தனது திறமையால், அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. இந்த நேரத்தில், பிரபல மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அயர்லாந்தில் செட்டிலாகிவிட்டார் கோபிகா. திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாத கோபிகா சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைக்ளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
அவரின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், “ஆட்டோகிராப் கோபிகாவா இது? இன்னும் சின்ன பொண்ணு மாதிரி சிக்குனு இருக்காங்க” என கமெண்ட் செய்துவருகின்றனர்.
0
0