“தொடங்கியது அயலான் பட டப்பிங்” – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷி

24 February 2021, 3:49 pm
Quick Share

தமிழகத்தின் நம்ம வீட்டு பிள்ளை ஆக இருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டியவர், தற்போது சினிமாவில் ஓஹோவென உயர்ந்து முன்னணி நடிகராக இருக்கிறார். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது டாப் இல் இருக்கிறார்.

கடைசியாக வெளியான ஹீரோ படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டாக்டர் திரைப்படம் அனைத்து வேலைகளும் முடிந்து ஓரிரு மாதங்களில் வெளியாக இருக்கிறது. இன்னொரு படமான அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது அந்த படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளது.

அதன் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குறிப்பிடத்தக்கது. ஏலியன் மற்றும் கிராபிக்ஸ் அடிப்படையில் இப்படம் உருவாகிறது. இதனால் ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 13

0

0