இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்தாண்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் Mission : Chapter 1 உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் போட்டிபோட்டுக்கொண்டு வசூல் ஆகி வருகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது.
அயலான் திரைப்படம் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு செம டஃப் கொடுத்துள்ளதாம். ஏலியன் காட்டும் அன்பில் சிவகார்த்திகேயன் அதை அரவணைக்கிறார். படத்தின் VFX காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் காட்சிகள் தமிழ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திருக்கிறது. எனவே வழக்கம் போல குழந்தைகளை கவரும் சிவகார்த்திகேயன் படமாக இல்லாமல் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை சேர்ந்து கொண்டாட வைக்கும் படமாக அயலான் உள்ளது படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது என ஆடியன்ஸ் கருத்து கூறினார்கள்.
இந்நிலையில் அயலான் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அத்துடன் விமர்சன ரீதியாகவும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால். இனிவரும் பொங்கல் விடுமுறையை நாட்களில் பல கோடிகள் வசூலிக்கும் என கூப்பிடுகிறது . எனவே 6 வருடன் கடின உழைப்பு சிவகார்த்திகேயனுக்கு தக்க பலனை அளித்துள்ளதாக ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.