இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க காரணம் தேசிய விருதுதான். தேசிய விருதுக்காக எத்தனையோ கலைஞர்கள் உடலை வருத்தி சினிமாவுக்கு உழைப்பது உண்டு.
அப்படி உழைத்தவர்களுக்கு தேசிய விருது கிடைத்தால் அதை விட பெரிய சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படி நேற்று 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழ் சினிமாவில் சிறந்த படத்திற்கான பிரிவில் பார்க்கிங் படம் 3 விருதுகளை தட்டிச் சென்றது, குறிப்பாக சிறந்த படம், சிறந்த திரைக்கதை மற்றும் வசனம், சிறந்த குணச்சித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் என 3 விருதுகள் கிடைத்தது சிறந்ததாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வரிசையில் சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் வாத்தி படம் தேர்வாகி அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு கிடைத்தது. இதையடுத்து தமிழ் சினிமாத்துறையினர் தேசிய விருது பெற்ற கலைஞர்களை வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் கலிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தேசியத் திரைப்பட விருதுகள் சிலவெனினும் பெற்றவரைக்கும் பெருமைதான்.
விருதுகளை வென்ற கலைக் கண்மணிகள் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் – கே.எஸ்.சினிஷ், சகோதரர் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ஜி.வி.பிரகாஷ், நடிகை ஊர்வசி, சரவண மருது, சவுந்தரபாண்டியன், மீனாட்சி சோமன் ஆகிய அனைவர் மீதும் என் தூரத்துப் பூக்களைத் தூவி மகிழ்கிறேன்.
இந்த மிக்க புகழைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மேலும் உழைப்பதற்கு
இந்த விருதுகள் ஊக்கமும் பொறுப்பும் தருமென்று உறுதியாய் நம்புகிறேன்.
ஆயிரம் சொல்லுங்கள் ஆடுஜீவிதம், அயோத்தி விருது பெறாதது
எனக்கு ஏமாற்றம்தான் என பதிவிட்டுள்ளார்.
தமிழில் வெளியான அயோத்தி திரைப்படத்தின் கதை சாதி மத பேதங்களை கடந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாகவும், மனிதத்தை விதைப்பதாக அமைந்தது. படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடியதை மத்திய அரசு கொண்டாட மறந்துவிட்டது.
அதே போல ஆடுஜிவிதம் படத்தில், தனது உடலை வருத்தி உழைப்பை போட்ட நடிகர் பிருதிவ்ராஜ்க்கு இது ஏமாற்றம் தான். மலையாள திரையுலக ரசிகர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.