நாங்க சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டோம்: சின்னத்திரை நடிகர் முகமது அசீம்!

2 February 2021, 6:34 pm
Quick Share


தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்து விட்டதாக சின்னத்திரை நடிகர் முகமது அசீம் தெரிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாயா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர் முகமது அசீம். இதையடுத்து, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், பகல் நிலவு என்று ஒரு சில தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொலைக்காட்சி தொடரில், விக்னேஷ் கார்த்திக், சையது அன்வர் அகமது, சமீரா ஷெரீப், ஷிவானி நாராயணன் மற்றும் முகமது அசீம் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர்.

இதில், முகமது அசீம் மற்றும் ஷிவானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவரைத் தொடர்ந்து அசீம் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு இச்ல காரணங்களால் அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில் இந்த நிலையில், அசீம் தனது சமூக வலைதளத்தில் தனது மனைவி சையது ஷோயாவை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சட்டப்படி பிரிந்துவிட்டோம். இருவரது பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தால் விவாகரத்து செய்யப்பட்டுள்ளோம். எங்களது திருமண நிலை குறித்து எந்த ஒரு தனிப்பட்ட கேள்விகளும் கேட்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0