பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.
இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.
இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.
இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது 56 வயதாகும் பப்லு கட்டுமஸ்தான தோற்றத்தை வைத்து இளமையாக தோன்றுகிறார்.
இந்நிலையில், தற்போது இந்த ஜோடி பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களது பிரிவு குறித்து பயில்வான் ரங்கநாதன் youtube ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பப்லு பதிலடி கொடுத்திருந்தார். நான் பப்லு பற்றி உண்மை எல்லாம் சொல்கிறேன்.
இவர் முதலில் பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பப்லுக்கு அதிகமாக கோபம் வரும் அதனால், தான் பீனாவிற்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். பப்லு ஷீத்தலை ஒரு நிகழ்ச்சியில் தான் சந்தித்தாக கூறி இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம். ஷீத்தல் தன்னை வற்புறுத்தி தான் விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்ததாக பப்லு தெரிவித்து இருந்தார். ஷீத்தல் ஸ்டார் ஹோட்டலில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பப்லு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவு செய்துள்ளார். எல்லா தவறுகளையும் நீ செய்துவிட்டு இப்போது, என் மீது கோபப்பட்டால் எப்படி ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் நீ கொடுத்தியா இல்ல நான் கொடுத்தனா இனிமேலும் பாவத்தை செய்யாதே என்று பயில்வான் வெளுத்து வாங்கியுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.