பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.
இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.
இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.
இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அவ்வப்போது மனைவியுடன் கொஞ்சல் , ரொமான்ஸ் , வானத்தில் ப்ரொபோஸ் என சமூகவலைதளவாசிகளை செம கடுப்பேற்றி வந்த பப்லு தற்போது இரண்டாம் மனைவியையும் பிரிந்துவிட்டாராம்.
ஆம், ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்லுவுடன் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார். இதையடுத்து பப்லுவை பிரிந்துவிட்டார் போல என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்த அதற்கு லைக்ஸ் போட்டு பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார் கப் கேக் ஷீத்தல். இதையடுத்து நெட்டிசன்ஸ் பலரும் இந்த ஜோடியை ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் இவர்கள் பிரிவு குறித்து ஒரு உண்மை தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பப்லு தன் மகனை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஷீத்தலை திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் நம்பிக்கை இழந்த ஷீத்தல் சுயநலமாக இருக்கும் உன்னுடன் வாழவே பிடிக்கவில்லை என கூறி அவருடன் சண்டையிட்டு பப்லுவை பிரிந்துவிட்டாராம். அதுவும் இன்றி பப்லுவின் வயது ஷீத்தலுக்கு மிகப்பெரிய சங்கட்டமாக இருந்ததாம்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய சினிமா பத்திரிகையாளர் வித்தகன் நான் பப்லுவிடம் உங்களுக்கும் ஷீத்தல்க்கும் இடையில் வந்தது யார் என்று கேட்டேன். இதற்கு பப்லு என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனை கேட்காதீர்கள் எனக்கு, இப்போது சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது. அதைப்பற்றி கேளுங்கள் இப்போது, நிறைய படங்களில் நடித்து வருகிறேன். அது தொடர்பாக பேசுங்கள். இனிமேல் நான் சினிமாவை காதலிப்பேன் என பப்லு கூறியதாக வித்தகன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.