பாலாஜியை மீண்டும் ஒரு முறை கதறி அழவைத்த பிக்பாஸ் ! வைரலாகும் வீடியோ !

Author: Udayaraman
2 December 2020, 4:20 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பல போட்டியாளர்களில் அதிக Haters இருக்கும் ஒரே போட்டியாளர் பாலாஜி தான். தனக்கு குறும்படம் வந்துவிட கூடாது மற்றும் அதே சமயம் நாம் Content கொடுத்து Lime Light-லும் இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் முகத்துக்கு நேரே பேசிவிட்டு,

அதன் பிறகு காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல் கேட்டு தனது விளையாட்டை விளையாடுகிறார். அவருக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இன்று பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்பாஸ் அவருக்கு கேக் அனுப்பியுள்ளார். இதனால் அவர் மிகவும் ஆனந்த கண்ணீருடன், “இந்த பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, நான் கொஞ்சம் கோபமாக தான் இருப்பேன். ஆனால் உடனே நான் எல்லாவற்றையும் மறந்து விடுவேன்.

ஒருவேளை நான் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அதற்காக இதோட நிறுத்தி விடுவேன் என்று நினைக்க வேண்டாம். மீண்டும் நான் என்னுடைய வேலையை தொடர்ந்து செய்வேன். ஏன்னா Game அப்படி” என்று கூறினார்.

Views: - 59

0

0