தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார்.
மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.
அந்தவகையில் தற்போது ஒரு ஐட்டம் ஆட்டக்காரி என்னை ஏமாற்றி அல்வா கொடுத்துவிட்டார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் என்கிற கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு இரண்டுவிதமான நாடகம் நடத்தவேண்டும் என கூறி என்னிடம் அட்வான்ஸ் தொகையை கொடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்ய சொன்னார்கள். முதல் நாள் எஸ்.வி.சேகர் நாடகம் வேண்டும் என்றும், அடுத்த திருவிழாவுக்கு கவர்ச்சி நடிகை யாரையேனும் நடனமாட அழைத்து வாருங்கள் என்றும் சொன்னார்கள்.
நானும் அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு முதல் நாள் நிகழ்ச்சி எஸ்.வி.சேகர் நாடகம் சிறப்பாக நடைபெற்றது. அடுத்தநாள் என்னை சென்னைக்கு ஷூட்டிங் வர சொல்லி திடீரென அழைத்தார்கள். அப்போது நான் அந்த கவர்ச்சி நடிகையிடம் கூறிவிட்டு அவருக்கான பணத்தை ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால், அந்த ஐட்டம் நடிகை ஆட்டம் ஆட போகாமல் குடித்துவிட்டு பிரபல அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஒருவருடன் இரவு ரூமுக்கு சென்றுவிட்டார்.
நடந்த சம்பவத்தை அடித்து நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் அவர் கொடுக்க முடியாதது என மறுத்து எனக்கே அல்வா கொடுத்துவிட்டார். பின்னர் அவர் சென்ற இடத்திற்கெல்லாம் போய் ரூம் கதவை தட்டினேன். பின்னர் அரசியல்வாதி ஒருவருடன் தனிமையில் இருந்தபோது கேட்டேன். அந்த நபர் நடிகை என்னிடம் வாங்கிய பணம் ரூ. 10 ஆயிரத்தை எனக்கு கொடுத்து அங்கிருந்து போக சொன்னார். அவர் மட்டும் உதவவில்லை என்றால் அந்த 10 ஆயிரம் ரூபாய் என் தலையில் விழுந்திருக்கும். அல்வா கொடுப்பதில் கெட்டிக்காரியான அந்த நடிகை எனக்கே அல்வா கொடுக்க பார்த்தார்” என கூறி நக்கல் அடித்துள்ளார் பயில்வான்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.