நயன்தாராவின் அந்த ரகசியத்தை இணையத்தில் பதிவிட்ட பயில்வான்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
27 March 2022, 6:18 pm
Quick Share

நடிகர் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு யூடியூப் சேனல் மூலம் பல நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பிரபலங்கள் பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பல முன்னணி நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பகிர்வதால் அவரது வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக உலாவி வருகின்றது.

அவ்வப்போது அவரது பேச்சுகள் சர்ச்சைகளையும் கிளப்பி வருகின்றன. சமீபத்தில் ராதிகாவின் அம்மாவைப்பற்றி பயில்வான் தரக்குறைவாக பேசிதாகவும் , இதனையடுத்து கடற்கரையில் பயில்வான் ரங்கநாதனை ராதிகா வெளுத்து வாங்கி விட்டதாகவும், அந்த தகவலை அவரே சொன்னது போன்ற வீடியோவும் செம வைரலாகியது.

அதேபோல் சமீபத்தில் கூட தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்துக்கும் பல்வேறு காரணங்களை பயில்வான் கூறி சினிமா துறையில் சர்ச்சையை கிளப்பினார். குறிப்பாக பெண் நடிகைகளை தாக்கி மோசமான கருத்துக்களை அதிகம் பதிவிடுதாக அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இருந்தபோதிலும் தனது கருத்துக்களை இணையத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையான நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து தற்போது இணைத்தில் வைரலாகியுள்ளது. நயன்தாரா பல நடிகர்களுடன் நெருக்கமாக இருந்தார் என்றும், அவர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் என்றும் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவுக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்றும் அதனால் தான் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்கிறார் என்ற தகவலை பயில்வான் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 600

11

9