கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க முழுக்க அதிரடியான ஆக்சன் திரைப்படமாக வெளியாகியுள்ள “ரெட்ரோ” திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பாஸிட்டிவ் ஆன விமர்சனங்களே வலம் வருகின்றன.
படத்தின் முதல் பாதி அருமையாக இருக்கிறதென்றும் இரண்டாம் பாதி கொஞ்சம் கடுப்படிப்பதாகவும் சில விமர்சனங்கள் வந்தாலும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் சூர்யாவை பார்த்தது பலருக்கும் திருப்தியை தந்துள்ளது. குறிப்பாக பலரும் “கங்குவா” திரைப்படத்தை “ரெட்ரோ” திரைப்படத்துடன் ஒப்பிடுட்டு இத்திரைப்படம் பிரமாதமாக இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் “ரெட்ரோ” படத்திற்கான விமர்சனத்தை தந்துள்ளார் பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
“இந்த படத்தை நான் பார்க்கும்போது எண்ணிப்பார்த்தேன். சூர்யாவுக்கு மொத்தமாக 21 சண்டை காட்சிகள் இருக்கின்றன. இதுவரையும் சூர்யாவின் சினிமா வரலாற்றில் இத்தனை சண்டை காட்சிகள் இருந்ததே இல்லை. ஒவ்வொன்றும் விதவிதமான சண்டை காட்சிகள்” என்று அந்த விமர்சனத்தில் கூறியுள்ளார்.
இவரின் விமர்சனத்தை பார்த்த பலரும், இதை எல்லாமா உட்கார்ந்து எண்ணிக்கொண்டிருப்பார்கள் என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.