அந்த மனசு தான் சார் கடவுள்…. வயிறு நிறைய சோறு போட்டு பலரின் பசி ஆற்றிய தெய்வம் விஜயகாந்த்!

தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த் பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார். ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார்.

கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், திரைப்பட கல்லூரி பட்டதாரிகளை இயக்குனராக அறிமுகப்படுத்தி உதவி செய்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான். மேலும் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும் அத்தனை பேரின் பசியை போக்கியவர் விஜயகாந்த். வயிறார சாப்பாடு போட்டு அதில் சந்தோஷப்படக்கூடய ஒரே நல்ல மனிதர் அவர். மேலும் விஜயகாந்தின் படப்பிடிப்புகளில் மட்டும் தான் அசைய உணவுகள் அதிகம் இருக்கும் ஊர்வன , பறப்பன நடப்பன என அனைத்தும் இருக்கும்.

விஜயகாந்த் ராவுத்தர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். அங்கிருந்து தான் சாப்பாடு வரும். விஜயகாந்த் ஷூட்டிங்கிற்கு போனால் வயிறு நிறைஞ்சிடும்பா என சொன்ன நடிகர்கள் பலர் உள்ளனர். அவர் போட்ட சோறு தான் இன்றைக்கும் அவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. எம்ஜியாருக்கும் விஜயகாந்திற்கு நல்ல நட்பு இருந்தது என பயில்வான் விஜயகாந்த் குறித்து பல விஷயத்தை பாசிட்டிவ் ஆக கூறியிருந்தார்.

Ramya Shree

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

4 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

5 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

5 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

6 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

7 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

7 hours ago

This website uses cookies.