அங்க பாரு சூப்பர் ஃபிகர் வருது.. திரிஷாவின் அம்மாவை பார்த்து கமெண்ட் அடித்த பிரபலம்..!

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால் திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.

இதனிடையே, வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. இதனால் திருமண வாழ்க்கையே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.

சரித்திர திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் திரிஷா வீர பெண்மணியாக, பயங்கரமான ஆக்ஷன் ரோலில் நடிக்க உள்ளாராம். இதற்காக அவர் குதிரையேற்றம், களரி சண்டை உள்ளிட்ட பயிற்சியில் மும்முரமாக இறங்கியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்கள் பகிர்ந்து வரும் பயில்வான் நடிகர் திரிஷா குறித்த தகவல் ஒன்றைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். திருமண வயதை தாண்டி த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்க காரணம் என்பது ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் கூறப்படுகிறது.

அதில், நிச்சயம் முடிந்து திருமணம் வரை சென்று நின்று போனது. சினிமா நடிகர் ஒருவரால் காதலிக்கப்பட்டு அவரால் திரிஷா ஏமாற்றப்பட்டார். பார்ப்பவர்கள் திரிஷாவை காட்டிலும் அவரது அம்மாவை தான் அதிகமாக ரசித்ததாகவும், இதில், முக்கிய விஷயம் என்னவென்றால் நடிகை திரிஷாவை விட அவரது அம்மா அழகாக இருப்பார் என்று கூச்சமில்லாமல் பயில்வான் கூறியது தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Poorni

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

15 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

15 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

16 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

16 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

16 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

17 hours ago

This website uses cookies.