தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் ஒரு சில ஜோடிகள் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து பேவரைட் ஜோடிகளாக பார்க்கப்படுவார்கள். அப்படித்தான் திரிஷா- விஜய் ஜோடி நடித்தாலே அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் படமாக அமைந்துவிடும்.
அவர்களின் கெமிஸ்ட்ரி, ரொமான்ஸ் உள்ளிட்டவை திரையில் பார்க்கவே மிகவும் ரியாலிட்டியாக இருக்கும். எனவே இவர்கள் சிறந்த திரைப்பட ஜோடிகளாக ரசிகர் மனதில் இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அப்படி விஜய் திரிஷா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் தான் கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்கள்.
இந்த படங்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு விஜய் த்ரிஷா இருவரும் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகள் லிப்லாக் காட்சிகளில் நடித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அது மட்டும் இல்லாமல் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டார் என்றும் நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக பழகி ரகசிய உறவில் இருந்து வருவதாக கூட கிசுகிசுக்கள் வெளியானது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு அதிர்ச்சியான தகவலை பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது விஜய் தன் தாய் சோபாவுக்காக ஆசை ஆசையாய் கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தார். அந்த கோவிலுக்கு நடிகை திரிஷாவும் வந்ததாக கூட அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது. அது மட்டுமில்லாமல் த்ரிஷா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் விஜய்யின் அம்மா சோபாவுக்கு த்ரிஷா அந்த கோவிலுக்கு வருவது பிடிக்கவில்லையாம்.
இதனால் விஜய்யின் அம்மா திரிஷாவை அந்த கோவிலுக்கு வரக்கூடாது என விரட்டி அடித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது உறுதிப்படுத்தாத தகவல் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். காரணம் இவர்கள் இருவருமே எம்மதமும் சம்மதம் என்று வாழக்கூடியவர்கள் எனவே இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார் பயில்வான்.
0
0