நடிகர்களின் போதை பழக்கம்? தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

Author: Prasad
24 June 2025, 7:59 pm

நடிகர் ஸ்ரீகாந்த் கைது

நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் தகராறு ஏற்பட்டது தொடர்பாக அதிமுக முன்னாள் IT Wing நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிரதீப் என்பவர் போதை பொருள் சப்ளை செய்தது தெரியவர, பிரதீப்பை போலீஸார் கைது செய்தனர். 

பிரதீப்பை விசாரிக்கையில் பிரசாத் ஸ்ரீகாந்தை வைத்து “தீங்கரை” என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும் ஸ்ரீகாந்த் போதை பொருள் கேட்டதாக கூறி தன்னிடம் பிரசாத் கொக்கைன் வாங்கிச் சென்றதாகவும் பிரதீப் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

bayilvan ranganathan talks about srikanth case

அப்போது அவரது இரத்தமாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் ஸ்ரீகாந்த் உண்மையில் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் 14 ஆவது பெருநகர் நீதிமன்றத்தின் முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வருகிற ஜூலை 7 ஆம் தேதி வரை ஸ்ரீகாந்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஸ்ரீகாந்தின் வாக்குமூலம்

இதனிடையே நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் கொடுத்த செய்தியும் வெளிவந்தது. அதாவது “ நான் தீங்கரை படத்தில் நடித்திருந்தேன். அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரசாத் எனக்கு ரூ.10 லட்சம் பாக்கி வைத்திருந்தார். அந்த 10 லட்சம் பாக்கி பணத்திற்காக பிரசாத் மூன்று முறை எனக்கு கொக்கைன் வாங்கிக்கொடுத்தார். நான்காம் முறை நானே கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன்” என அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்

bayilvan ranganathan talks about srikanth case

போதை பொருள் வாங்கப்பட்ட வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளது.. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய பயில்வான் ரங்கநாதன் இது குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இனி யார் யார் மாட்டுவார் தெரியுமா?

“சென்னையில் கொக்கைன் பயன்படுத்திய எதாவது ஒரு நடிகர் அகப்பட்டுக்கொண்டார் என்றாலே, ‘நான் மட்டும்தான் மாட்டுவேன், இருங்கடா உன்னையும் மாட்டிவிடுகிறேன்’ என சொல்லி சம்பந்தப்பட்ட அனைவரையும் மாட்டிவிட்டுவிடுவார்கள். ஆதலால் இப்போதைக்கு ஸ்ரீகாந்தும் கிருஷ்ணாவும் போலீஸில் சிக்கியிருக்கிறார்கள். பிரதீப் இவர்கள் இருவரின் பெயரை மட்டுந்தான் சொல்லியிருக்கிறாரா அல்லது இன்னும் பலரை போட்டுக்கொடுத்திருக்கிறாரா என போகபோகத் தான் தெரியும்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். 

bayilvan ranganathan talks about srikanth case

மேலும் பேசிய அவர், “மலையாள சினிமாத்துறையில் நடிகர்கள் பலரும் மது அருந்துவிட்டு ரகளை செய்கிறார்கள். ஆதலால் மலையாள சினிமாவின் தயாரிப்பாளர் சங்கம், ஒரு தீர்மானத்தை போட்டு மலையாள நடிகர் சங்கத்திடம் சென்று கொடுத்துவிட்டார்கள். என்ன தீர்மானம் என்றால், இனிமேல் சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் செய்கிறபோது நடிகர் நடிகைகள் தாங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும்போது மது அருந்தமாட்டோம் எனவும் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் எனவும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று  தீர்மானம் போட்டுள்ளது. தமிழில் இது போன்ற சூழலை நடிகர் நடிகைகள் ஏற்படுத்திவிடாதீர்கள்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

  • Ajith kumar cat viral videoஎன் கூட சென்னைக்கு வர்ரியா? பூனையை மடியில் வைத்து கியூட்டாக கொஞ்சிய அஜித்- வைரல் வீடியோ