சூர்யாவின் அழுகை மகாநடிப்பு… அஞ்சலி செலுத்தியதன் பின்னணி இது தான் – பரபரப்பை கிளப்பிய பயில்வான்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதனைடுத்து நடிகர் சூர்யா அண்மையில் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி கலங்கி அழுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது. ஆரம்ப காலத்துல் நான் 4, 5 படங்களில் நடித்தும் பெயர் கிடைக்கவில்லை. பின்னர் பெரியண்ணா படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன். அதற்காக கடவுளிடம் வேண்டி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தேன்.

அந்த சமயத்தில் சமயத்தில் ஷூட்டிங்கில் என்னை பார்த்து கேப்டன் அண்ணன் இந்த வயசுல அசைவம் சாப்பிடலேனா உடம்புல தெம்பு இருக்காது என்று சொல்லி அவர் தட்டில் இருந்து எடுத்து எனக்கு ஊட்டிவிட்டார். அவ்வளவு அன்பான மனிதர். அவரோடு நான் நடித்த 8 நாளுமே அவரை பிரம்மிச்சு தான் பார்த்தேன். அவரின் துணிச்சலை பார்த்து வியந்துள்ளேன்.

அவரைப்போல் இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு மிகப்பெரிய இழப்பு. அண்ணனோட இழப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவருடைய குடும்பத்தாருக்கும், சொந்தங்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் அவருடைய நினைவில் இருப்போம். அதேபோல் நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று எல்லாரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றார் சூர்யா.

இந்நிலையில் சூர்யா கேப்டனின் உடலுக்கு அஞ்சலி செய்து கதறி அழுதது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், “மறைந்த நடிகர் விஜயகாந்த் இறப்பு அன்று வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததாக காரணம் காட்டி நடிகர் சூர்யா இறுதி சடங்கிற்கு வரவேயில்லை. பின்னர், அவர் சமாதிக்கு வந்து மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சூர்யாவுக்கு தான் ஷூட்டிங் சிவகுமார் எங்க போனார்? அவர் கூட வரவில்லையே என கேள்வி எழுப்பிய பயில்வான், விஜயகாந்த் மீது சிவகுமாருக்கு வெறுப்பு. ஏனென்றால் சூர்யாவின் திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும் அரசியல் காரணங்களை கூறி விஜயகாந்த் முகத்திற்கு நேராகவே வரமுடியாது என்று கூறிவிட்டார்.

அதன் பின்னர் தொடர்ந்து பிரச்சனை செய்துள்ளார் சிவகுமார். இந்நிலையில் கடைசி நேரத்தில் வந்து கேப்டனின் சமாதியில் கதறிய சூர்யா, பொய் நாடகம் ஆடியுள்ளார். ஆம், கேப்டனின் மறைவுக்கு வந்த பிரபலங்கள் லிஸ்ட் என்று மீடியாக்களில் விவாதம் நடைபெற்று வருவதால் கடைசி வரை நாம் போகவில்லை என்றால் அது தொழில் சார்ந்து எதிர்மறையாக பல பிரச்சனைகளை உண்டாக்கும் என கருத்தில் கொண்டு ஓடிவந்துள்ளனர் சிவகுமார் குடும்பம் என விமர்சித்தார் பயில்வான்.

UpdateNews360 Rajesh

Recent Posts

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

41 minutes ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

50 minutes ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

2 hours ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

3 hours ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

3 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

4 hours ago

This website uses cookies.