பீஸ்ட் படத்துடன் மோதும் கேங்ஸ்டர் படம் – தமிழகத்தில் வசூல் பாதிக்கப்படுமா..?

Author: Rajesh
25 March 2022, 6:39 pm
Quick Share

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படமும் அன்றைய தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்ட பீஸ்ட் படக்குழு திரைப்படத்தை ஒரு நாளுக்கு முன்பே ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. அதன்படி ஏப்ரல் 13 தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து படத்திற்கான புரோமோஷன் பணிகளை சன்பிக்சர்ஸ் தொடங்கியுள்ளது.

புனிதவெள்ளி மற்றும் சித்திரைத் திருநாள் உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வருவதால், பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அடுத்தடுத்த தேதியில் வெளியாகின்றது.இரண்டு படங்களும் மெகா பட்ஜெட் படங்கள் என்பதால், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை விஜய்க்கு அதிக ரசிகர்கள் கொண்ட மாநிலம் என்பதால் கண்டிப்பாக பீஸ்ட் திரைப்படம் வசூலை குவிக்கும், இருந்தாலும் தெலுங்கு கன்னட மொழிகளில் எதிர்பார்த்த வசூலை எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரத்தில் விஜயின் முந்தைய படங்களை விட தற்போது பீஸ்ட் திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதுவே அந்த மாநிலங்களில் விஜய்கான மவுசு இருப்பதை காட்டுகிறது.

இதற்கிடையே, தெலுங்கு படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஜெர்சி படமும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது. இது வட இந்திய மார்க்கெட்டில் கோலோச்சும் என்பதால், கேஜிஎப், பீஸ்டின் பாக்ஸ் ஆஃபீஸ் அந்த மார்க்கெட்டில் பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எப்படிருந்தாலும், திரைப்படத்துக்கு முந்தைய கணிப்புகள் எல்லாம், பட வெளியீட்டிற்கு பிறகு மாறவும் வாய்ப்பிருப்பதை திரைவல்லுநர்கள் சுட்டிக்காட்டுவதால், பாக்ஸ் ஆபீஸில் கோலோச்சும் படத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Views: - 652

0

0