வீரா படத்தில் ரோஜாவுக்கு பதில் இவர்தான் நடித்திருக்க வேண்டியது.. நடிச்சிருந்தா கச்சிதமா பொருந்தியிருக்கும்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 4:01 pm

தமிழ் சினிமாலை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது நடிப்பு, ஸ்டைல் மூலமாக ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

ஆரம்பத்தில் இருந்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதில் முக்கிய படமாக பல படங்கள் இருந்தாலும் 1994ல் வெளியான வீரா திரைப்படம் மறக்கமுடியாத திரைப்படம்.

ரஜினியுடன் மீனா, ரோஜா என இருகதாநாயகிகள் ஜோடியாக நடித்திருந்தனர். படத்தில் இளையராஜா பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார், தெலுங்கு ரீமேக் படமாக இருந்தாலும் படத்தை ரசிகர்கள் ஹிட் ஆக வைத்தனர்.

மேலும் இந்த படத்தில் ரஜினி ரோஜாவையும், மீனாவையும் திருமணம் செய்திருப்பார். இந்த படத்தில் முதலில் ரோஜாவுக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க படக்குழு முடிவு செய்தது.

ஆனால் அப்போது தெலுங்கில் பாப்புலராக இருந்த ரம்யா கிருஷ்ணன், தமிழில் நடிக்க கால்ஷீட் இல்லை என கூறிவிட்டாராம். அதன்பின் தான் உழைப்பாளியில் நடித்த ரோஜாவையே மீண்டும் நடிக்க படக்குழு முடிவு எடுத்தது.

ஒருவேளை அப்பவே ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தால், அந்த கதாபாத்திரத்த்துக்கு இவரு கச்சிதமா பொருந்தியிருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக செம மாஸாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Amaran movie 100 days celebration பாதி சம்பளத்தை ஆட்டைய போட்டுறாங்க…அமரன் வெற்றி விழாவில் SK ஓபன் டாக்.!