என் இனிய தமிழ் மக்களே என்று சொன்னவுடன் சட்டென நியாபகத்திற்கு வருபவர் இயக்குனர் பாரதி ராஜா. இவர் தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பெரும்பாலும் தன் ஒவ்வொரு படங்களிலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை கொடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முத்தான இயக்குநரகளில் ஒருவரான பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனர்களாக பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் உதவி பணியாற்றி உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் யூடியூப்பிற்கு சேனலுக்கு பேட்டிக்கொடுத்த பாரதி ராஜா, முதல் படம் இயக்கும்போது பிரபலங்களை வைத்து படம் எடுத்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் மட்டும் புதுமுகங்களை நடிக்க வைத்தீர்கள்?என்ற கேள்விக்கு… முதலில் கிழக்கே போகும் ரயில் படத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி தான் நடிக்கவிருந்தனர். ஆனால் அவர்களின் டேட் இல்லாமல் போனது.
அதே போல் தான் ஒரு பிரபல டாப் நடிகரின் தங்கச்சியை புக் பண்ணேன். அது யாருன்னு பேர் சொல்ல கூடாது. அந்த பொண்ணை நான் ஹீரோயினா புக் பண்ணிட்டு போய்ட்டேன். அந்த படத்தில் விஜயன், பாக்யராஜ் தான் அசிஸ்ட்டண்ட் ஆக இருந்தார்கள். அந்த சமயம் ஹைதராபாத்தில் நான் பிஸியாக இருந்த போது அந்த பொண்ணு வரல, என்னன்னு பார்த்தா, எம்ஜிஆர் காண்ட்டிராக்ட் போட்டு தூக்கிட்டு போய்ட்டாரு… அதனால் தான் நான் பெரும்பாலும் புதுமுகங்களை வைத்து படமெடுத்தேன் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.