அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரப்போகிறவர் ரஜினி – பாரதிராஜா!

3 December 2019, 1:12 pm
Bharathiraja_UpdateNews360
Quick Share

“இவன் பரம எதிரி கூட இவன பாராட்டாம இருக்க முடியாது, இவன் அழிஞ்சுபோனும்னு நெனைக்கிறவன்கூட அடிமனசுல இவன admire பண்ணாம இருக்க முடியாது ” என்று தல படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனம் தலைக்கு எந்தளவுக்கு பொருந்துதோ அதைவிட அதிகமாக தலைவர் ரஜினிகாந்த்துக்கு பொருந்துகிறது.

ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் வேலூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நொடிக்கு ஒரு முறை ரஜினியை திட்டிக்கொண்டிருந்த பாரதிராஜா பேசுகையில் ரஜினியின் அரசியல் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. எனக்கும் அவருக்கும் 48 ஆண்டுகால நட்பு உள்ளது. ஐயப்பன், மதுரை மீனாட்சி என ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பவர் இருக்கிறது. அதேபோல் மனிதர்களுக்கும் தனித்தன்மை உள்ளது. அது அவரவருக்கான தனித்தன்மை. எல்லோரும் பாரதிராஜா ஆகிவிட முடியாது. எல்லோராலும் ரஜினி ஆகிவிட முடியாது. அவருக்கு ஒரு பவர் உள்ளது.

தயாரிப்பாளர் தாணு பேசுகையில், தமிழ் சினிமாவில் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வரலாறு படைத்துள்ளனர். அவர்களின் மரபுவழி வந்தவராக ரஜினியைப் பார்க்கிறேன். அவர் நல்ல மனிதர் என்பதால் தான் பிரதமரே அவரை வீட்டில் சென்று சந்தித்தார். இவர்தான் தமிழகத்துக்கு துணையானவர். ரஜினி வென்று காட்டுவார். உயர்ந்து நின்று காட்டுவார்” என்றார். 2021 நம்ம கையில் என்று தலைவர் ரசிகர்கள் துள்ளி குதிக்கிறார்கள்.

1 thought on “அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரப்போகிறவர் ரஜினி – பாரதிராஜா!

Comments are closed.