தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு..!

29 August 2020, 5:13 pm
Quick Share

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தியே நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். அந்த தேர்தலுக்கு கே.விஜயகுமார் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

2017 – 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில், தலைவராக விக்ரமனும், பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே, 2019 – 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதால், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Views: - 31

0

0