தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் நேற்று மாலை 5.20 மணிக்கு திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், பவதாரணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பவதாரணி தொடர்பான ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அவர் வீட்டில் எப்போதும் மிருதங்க சத்தம் இன்னொரு பக்கம் யுவன் பாடிக்கொண்டே இருப்பார் எல்லா சத்தமும் சேர்ந்து ஒரே மன உளைச்சலாக இருக்கும். சில சமயங்களில் அழும் நிலைக்கு வந்து விடுவேன். அப்பா எல்லா இடங்களை போலவும், வீட்டிலும் கொஞ்சம் கறறாக தான் இருப்பார். எங்கள் வீட்டில் டைனிங் டேபிளில் எல்லோரும் இசையமைத்த பாடல்களை அப்பாவிடம் போட்டு காட்டுவோம் அதை கேட்டவுடன் அப்பா கரக்க்ஷன் செய்வார் என்று பவதாரணி தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.