எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியான கிளாமர் நடிகை யாஷிகா ஆனந்த்!

1 February 2021, 4:31 pm
Quick Share

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வாலி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தைத் தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை என்று பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநரோடு இல்லாமல், நெத்தியடு, கிழக்கு சீமையிலே, ஆசை, நியூ, மகா நடிகன், திருமகன், வியாபாரி, நண்பன், இறைவி, ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை என்று பல படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் எஸ் ஜே சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதோடு, சிறந்த வில்லனாகவும் போற்றப்பட்டார். மெர்சல் படத்தைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் மாநாடு படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மேலும், உயர்ந்த மனிதன், பொம்மை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு கடமையை செய் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மேலும், சுந்தர் சி நடித்த முத்தின கத்தரிக்காய் படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்குகிறார். கடமையை செய் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தகவல் மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டுள்ளார். மேலும், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் படத்தில், எஸ் ஜே சூர்யாவின் மனைவியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 2

0

0