நீண்ட வயசு வித்தியாசத்தில் சீரியல் நடிகையை மணந்த Big Boss கவிஞர் சினேகன் !

Author: Udayachandran
29 July 2021, 1:39 pm
Snehan Marriage - Updatenews360
Quick Share

திரைத்துறையில் கிராமத்து பாடல்களை எழுதி கொண்டிருந்த சினேகன், ‘ராம்’ படத்தில் வந்த “ஆராரிராரோ”, பாண்டவர் பூமி படத்தில் வந்த “அவரவர் வாழ்கையில், ஆயிரம் ஆயிரம் மாற்றங்களை” என்கிற பாடல்கள் மூலம் எட்டுத்திக்கும் பிரபலமானார்‌.

அதன் பின் விஜய் டிவி பிக் பாஸ்க்கு வந்தார், அப்படியே தனது திறமையால் உடனிருக்கும் போட்டியாளர்களுடன் ஈடுகொடுத்து இரண்டாம் இடத்திற்கு வந்து, பொது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இவர் பங்கேற்ற முதல் சீசனில் இவரை பார்க்க இவரது தந்தை வந்த எபிசோட் இன்று அளவிற்கும் மிக பிரபலம்.

இந்தநிலையில், பிக்பாஸ் முடிந்த பிறகு கமல் கட்சியில் இணைந்த சினேகன், அவருக்கு உறுதுணையாக பக்கபலமாக இன்றுவரை இருக்கிறார். மேலும், இன்று சீரியல் நடிகை கன்னிகாவுக்கும் சினேகனுக்கு திருமணம். கமல் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்து இன்று கமல் தாலி எடுத்து கொடுக்க அவரது முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

Views: - 376

15

7