சாச்சனாவுக்கு Bigg Boss வீட்டில் நடந்த கொடுமை…? முதல் நாளே வீட்டை விட்டு வெளியேறி அதிர்ச்சி!

Author:
7 October 2024, 1:45 pm
sachana namidass
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் நேற்று பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக துவக்கி வைக்கப்பட்டது. விஜய் டிவியில் இதுவரை ஏழு சீசன் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் தற்போது 8வது சீசன் மிகவும் புது விதமாக பல வித்தியாசமான கண்ணோட்டத்தில் துவங்கப்பட்டிருக்கிறது.

VJS Big boss

இந்த சீசனை கமல்ஹாசன் இடத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அதுவே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டு வந்தது. இதில் முதல் போட்டியாளராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளே சென்றதை எடுத்து இரண்டாவது போட்டியாளராக இளம் நடிகை சாச்சனா நேமிதாஸ் உள்ளே சென்றிருக்கிறார்.

கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாச்சனா நேமிதாஸின் எதார்த்தமான நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஒரே படத்திலேயே மக்களின் மனதில் இடத்தை பிடித்தார் .

bigg boss sachana

இப்படியான நிலையில் அவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சாச்சனா முன்னதாக ப்ரோமோவில் எனக்கு 21 வயசு ஆகுது. நான் பார்க்க ஸ்கூல் பொண்ணு மாதிரி இருப்பேன் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க. நான் மீடியாவுக்கு வந்ததே என்னோட அம்மாவோட பர்மிஷனில் தான். அப்பாவுக்கு இதுல இஷ்டமே இல்ல. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தான் நான் சினிமாவில் நுழைந்தேன்.

நான் அம்மாவுக்காக மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இப்போ எனக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாகிறது. சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்தை பிடிக்கணும் அப்படின்னு ரொம்ப கனவோடு இருக்கிறேன். அதற்கு இந்த பிக் பாஸ் சீசன் 8 மேடை எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என சாச்சனா கூறி இருந்தார் .

இப்படி இவர் கூறி ஒரு நாள் கூட முடியவில்லை. அதற்குள் நடிகை சாச்சனா நேமிதாஸ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாக தற்போதைய லேட்டஸ்ட் தகவல் வெளியாகி ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

sachana  Eivition

இதையும் படியுங்கள்: நான் செய்த பெரிய தவறு… மனுஷன் எவ்வளவு வேதனை பட்டிருந்தால் இப்படி சொல்லுவாரு!

ஒரே நாளில் இவர் வெளியேறுவதற்கு என்ன காரணமாக இருக்கும்? அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்? ஏதேனும் வீட்டில் அசம்பாவிதம் ஏற்பட்டு உடனடியாக வெளியேறினாரா?என்பது குறித்த பல கோணங்களில் ஆடியன்ஸ் கேள்வி எழுப்பி சந்தேகித்து வருகிறார்கள். இருந்தாலும் இது உறுதிப்படுத்தாத தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்தால் இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும் என்பதில் சந்தேகமே இல்லை… என்ன நடந்தது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • virat kohli தம்பி கிட்ட வாப்பா… விராட் கோலியை கை பிடித்து இழுத்து அலப்பறை செய்த Aunty – தீயாய் பரவும் வீடியோ!
  • Views: - 256

    0

    0