என்னுடைய கெரியர் காலி – அர்ச்சனாவின் பதிலால் வருத்திய நெட்டிசன்கள்

15 January 2021, 11:39 pm
Quick Share

பிக் பாஸ் சீசன் 4 இல் அர்ச்சனா வெளியேறியதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பாக அமைந்தது. அதற்கு காரணம் அவர் அன்பை ஓவராக பிழந்ததுதான். தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதை அன்பு கேங் என்று சொல்லுமளவு அன்பு அன்பு என ஓவராக பேசி மற்றவர்களை அவர்களின் கேமை ஆட விடாமல் தன் பக்கம் இழுத்து தனக்காக பயன்படுத்திக்கொண்டார். சம்யுக்தாவிற்கு பிறகு இவரது வெளியேற்றத்தை தான் மக்கள் அதிகமாக ரசித்தார்கள்.

வெளிய வந்த அர்ச்சனா தனது குடும்பத்தை மீண்டும் பார்க்கப் போகிறோம் என்று சந்தோஷத்தில் இருந்தார். அதேபோல் அவர் வீட்டிற்கு வருவதை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஆனால் சமூக வலைதளங்களில் இவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பை பார்த்து ட்விட்டரில் இருந்து வெளியேறினார். அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக வேலை செய்து கொண்டிருந்தவர், பிரச்சினை காரணமாக அந்த சேனலில் இருந்து வெளியேறினார். அதன்பின்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து பேசிய அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக வேலைப் பார்த்து இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒப்பந்தம் அடிப்படையில் தான் வேலை செய்தேன். ஊழியராக செயல்படவில்லை. எனவே நான் எனது தனிப்பட்ட வளர்ச்சிக்காக தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். அப்போதுதான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது என்றார். இப்படி ஒரு நிலையில் தான் கரியர் காலி என்றும் கூறியுள்ளார்.

தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் சென்று பேசிக் கொண்டிருக்கும்போதுதான் அர்ச்சனா எனது கேரியர் என்பது பினிஷ் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0