விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.
அது ஷோ பார்ப்பவர்கள் எல்லோரையுமே கலக்கமடைய வைத்தது. அதற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனிடையே, பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடியபோது, அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வந்தனர்.
இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே செல்லும் நிலையில், காதலை கூறிய விஜய் டிவி செட்டிலேயே திருமணத்தையும் தடபுடலாக நடத்தி விட்டது அமீர் – பாவனி ஜோடி. இதனால் நெட்டிசன்கள் பலரிடையே பேசு பொருளாக இந்த ஜோடி காணப்பட்டது. டான்ஸ் நிகழ்ச்சியில் நடைப்பெற்ற இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.
பல சர்ச்சைகளை தொடர்ந்து திருமணம் குறித்து முக்கிய நிகழ்வொன்றில் பேசும் போது பாவனி, “தன்னுடைய முதல் கணவரை மறக்கமுடியவில்லையெனவும், அமீர் தன்னுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும்” ஒரு குழப்பமான பதிலை கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இருவரும் வெளிநாட்டிற்கு செல்லும் போது எடுக்கபட்ட புகைப்படத்தை “துபாய்” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர் வட்டாரங்கள் “திருமணத்திற்கு முன் ஹனீமூன் செல்கிறார்கள்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.