மீண்டும் திரையில் பிக் பாஸ்..! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

8 August 2020, 4:41 pm
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர், நடிகைகளை கொண்டு வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியாவிலும் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். ஒரு வீட்டுக்குள் பிரபலங்களை அடைத்து வைத்து அங்கு இயல்பாக நடக்கும் விஷயங்களை திரையில் காண்பிக்கும் ஸ்வாரஸ்யத்திற்கு ரசிகர் பட்டாளம் மளமளவென உயர்ந்தது.

இந்த சூழலில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், திரைபடங்கள், நெடும் தொடர் உள்ளிட்ட அனைத்திற்கான படப்பிடிப்பிற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழல் நிலவியது. இந்த சூழலில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே பிக் பாஸ் நிகழ்ச்சிபோல் ஆட்டி படைத்து வரும் நிலையில், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு இது நல்ல பொழுதுபோக்காக அமையும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சிக்காக மும்பை பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதை சல்மன்கான் தொகுத்து வழங்கவுள்ளார். நடிகர் கமலஹாசனை வைத்து தமிழில் எப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Views: - 17

0

0